சூரிய வெளிச்சத்தின் அருமை தெரியுமா?

slider மருத்துவம்
வைட்டமின் டி குறைபாடுகளால் தோன்றும் பாதிப்புகள்

 

எப்போதும் ஏ.ஸி. அறையில் இருப்பவர்களுக்கு வைட்டமின் ‘டி’ சத்து குறைவாக வாய்ப்பு அதிகம் என்பதால் எலும்பு பாதிப்பு அதிகமாக வரும். நகர்ப்புறங்களில் மட்டுமே காணப்பட்ட ஏ.ஸி. எனப்படும் குளர்சாதனப் பெட்டிகளைக் கொண்ட வீடுகள் இப்போது கிராமங்களையும் ஆக்கிரமிக்கத் துவங்கிவிட்டன.

ஒரு நாளைக்கு 16 மணி நேரத்துக்கும் கூடுதலாக ஏ.ஸி அறையிலேயே இருப்பவர்களுக்கு வைட்டமின் ‘டி’ சத்துக் குறைவு வரும் அபாயம் இருப்பதாகச் சொல்கிறார்கள் மருத்துவர்கள். எப்போதும் ஏ.ஸி. அறையில் அமர்ந்திருப்பது, வெயிலில் தலைகாட்டாமல் இருப்பது போன்றவை வைட்டமின் ‘டி’ சத்துக் குறைவில் கொண்டுபோய் விட்டுவிடும். வைட்டமின் ‘டி’ குறைபாட்டால், எலும்பு பாதிப்பு அதிகமாக ஏற்படும். இதைத் தடுக்க ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடலில் வெயில் படவேண்டும்.  இப்படி அரை மணி நேரம் வெயிலில் உடலைக் காட்டுவது, ஒரு லிட்டர் பாலில் உள்ள கால்சியம் சத்தை உடலுக்குத் தரவல்லது.

 

சைவ உணவுகளைக் காட்டிலும் மாமிச உணவுகளில் கால்சியம் சத்து அதிகம். கிராமங்களில் சூரிய ஒளி படுவது அதிகம், ஆனால், உணவில் கால்சியம் சத்து குறைவு. ஆனால், நகர்ப்புறங்களில் சூரிய வெளிச்சம் படுவது குறைவு. ஆனால், உணவில் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது.

 

வைட்டமின் ‘டி’ சத்துக் குறைபாட்டால், சுவாசக்கோளாறு முதல் புற்றுநோய் வரை கூட வர வாய்ப்பு அதிகம். காசநோய்க்கும் இது காரணமாக அமைகிறது. வயது, கல்வி, பொருளாதார நிலை போன்றவற்றைத் தாண்டி பல தரப்பினரிலும் வைட்டமின் ‘டி’ சத்துக் குறைபாடு உள்ளது. வைட்டமின் ‘டி’ இருந்தால்தான் கால்சியம் சத்தைக் கட்டுப்படுத்தும். அதைக் கட்டுப்படுத்தாமல் போனால் பல பாதிப்புகள் வர வாய்ப்புள்ளது.

முக்கியமான விஷயம், நம் உடலில் வைட்டமின் ‘டி’ சத்து இல்லையென்றால், நாம் உட்கொள்ளும் மருத்து, மாத்திரைகள் வேலை செய்யாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *