You Are Here: Home » Articles posted by masteradmin (Page 3)
masteradmin

Number of Entries : 53

பீச்சாங்கை திரைப்படம் – Peechaangai

வலதுகை பழக்கம் உடையோரைவிட, இடதுகை பழக்கம் உள்ளவர்களுக்கு கூடுதல் ஆளுமை உண்டு. விளையாட்டு வீரர்களில் தொடங்கி எல்லாத் துறை சார்ந்தவர்களிலும் இடதுகை பழக்கம் உள்ளவர்களின் திறமை வலதுகை பழக்கம் உள்ளவரைக் காட்டிலும் கூடுதலாகவே இருக்கும். இதை கதைக் கருவாக வைத்து உருவாகியிருக்கிறது ‘பீச்சாங்கை’ திரைப்படம். கலைஞர் தொலைக் காட்சி நடத்திய நாளைய இயக்குநர் நிகழ்ச்சியில் பங்குபெற்று, வெற்றிபெற்ற அசோக், வெற்றிக்குக் காரணமாக ...

Read more

8 தோட்டாக்கள் – 8 thottaakkal – 8 thotaakal tamil film

சில படங்களின் டீஸரைப் பார்க்கும்போதே, இது வெற்றிப் படமாக இருக்கும். தரமான படமாக இருக்கும். பார்வையாளனின் பணத்திற்கு மதிப்பு கொடுக்கிற படமாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பு தோன்றும்.  இந்த எதிர்பார்ப்பை அண்மையில் கொடுத்திருக்கிறது ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளிவரவிருக்கும் 8 தோட்டாக்கள் திரைப்படம்.   இத் திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நாயகனாக அறிமுகமாகிறார் புதுமுக நடிகர் வெற்றி. இவருக்கு ஜோடி மலையாள நட ...

Read more

பாம்புச் சட்டை விமர்சனம் – மதிப்பெண்கள் 42% – paambu sattai review –

பணம் எனும் உணவு திடீர்த் தேவையாக வாழ்க்கை எனும் வயிற்றைக் கிள்ளும்போது, பணமில்லாத  ஒருவன், குறுகிய நேரத்திற்குள்  பசியைத் தீர்த்துக்கொள்ள வேண்டும் என்கிற நிர்பந்தத்தோடு புத்தி தடம் மாறுவது மனித இயல்பு. இதுதான் ‘பாம்புச் சட்டை’யின் கதைக் கரு. அதாவது, சந்தர்ப்பமும், சூழ்நிலையும் கிடைத்தால், விதியின் கொடிய கரங்கள் நேர்மையாளர்களையும் வீழ்ச்சி நோக்கி அழைத்துச் செல்லத் துடித்துக்கொண்டே இருக்கும் என்பதை உணர்த்துகி ...

Read more

தீக்குச்சியும் சிறுமியும் – மொழிபெயர்ப்பு சிறுகதை –

மொழிபெயர்ப்பு சிறுகதை தீக்குச்சியும் சிறுமியும் - ஹான்ஸ் கிறிஸ்டியன் ஆண்டர்சன் ( டென்மார்க் )    தமிழில் - பிச்சைக்காரன் தாங்கமுடியாத அளவுக்கு மிகக் கடுமையான குளிர் மட்டுமல்ல, பனிப் பொழிவும் இருந்த காரிருள் நேரம். அந்த ஆண்டின் கடைசி மாலைப் பொழுது அது. அந்த இரவு நேரத்தில், தாங்க முடியா குளிரையும் பொருட்படுத்தாமல் ஓர் ஏழைச் சிறுமி நடந்து செல்கிறாள். தலையிலோ, காலிலோ எதுவும் அணிந்திருக்கவில்லை. அவள் வீட்டை விட் ...

Read more

மார்பகப் புற்றுநோய் திருமணம் ஆகாத பெண்களையும் தாக்கலாம்!

மார்பகப் புற்றுநோய் திருமணம் ஆகாத பெண்களையும் தாக்கலாம்! பாலமுருகன் இது 21ம் நூற்றாண்டு. எல்லாவற்றிற்கும் விடை சொல்லி வருகிற மருத்துவ அறிவியல் காலம். ஆனால், இன்னமும் அடித்தட்டு மக்களிடமும், கிராமத்து மக்களிடமும் சிலவகை அறியாமை இருக்கத்தான் செய்கிறது. ஊடகங்கள் என்னதான் சொல்லிவந்தாலும், அவற்றை காதில் வாங்கிக் கொள்ளாமல், எல்லாவற்றிற்கும் அவர்களாகவே தீர்வு சொல்லித் திரிகிற மக்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கிறது. ...

Read more

விருது பெறுபவரின் திறமைகளை துருவி ஆராயவேண்டும்! – பிறைசூடன்

விருது பெறுபவரின்  திறமைகளை துருவி ஆராயவேண்டும்! கவிஞர் பிறைசூடன் பாலமுருகன் முப்பது ஆண்டுகாலம் தமிழ்ச் சினிமாவில் பாட்டெழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் பிறைசூடன் மிகச் சிறந்த இலக்கிய, பட்டிமன்ற பேச்சாளரும் கூட. வாசிப்புப் பழக்கம் மிகுதி கொண்டவர். படித்த இலக்கியங்களை அப்படியே உள்வாங்கிக் கொள்கிற இவரது ஞாபகத் திறன் நூறு ஜிபி மெமரி கார்டு. 2014ம் ஆண்டு இவருக்கு சென்னையிலுள்ள ஜெருசலேம் நிகர்நிலைப் பல்கலைக் கழகம் ...

Read more

எதிலிருந்து படிப்பது? – மனுஷ்யபுத்திரன்

எதிலிருந்து படிப்பது? மனுஷ்யபுத்திரன் ஒரு முறை புத்தகக் கண்காட்சி ஒன்றில் ஏராளமான இளைஞர்களை சந்தித்தேன். இவர்களில் கணிசமானோர் முதன்முதலாக தங்களது பாடப்புத்தகம் அல்லது தொழிற்சார் படிப்புகளுக்கு அப்பால் ஏதாவது புத்தகம் வாசிக்க வேண்டும் என்கிற ஆவலில் கண்காட்சிக்கு வந்தவர்கள். புத்தகக் கண்காட்சியை முன்னிட்டு ஊடகங்கள் செய்த பிரச்சாரத்தினாலும், புத்தகங்கள் ஆசிரியர்களை முன்வைத்து சமூக வலைத்தளங்களில் நடந்த சர்ச்சைக ...

Read more

நீங்கள் பென்சிலா? ரப்பரா? – வெற்றியின் விதை!

வெற்றியின் விதை! நீங்கள் பென்சிலா? ரப்பரா? பி. சுவாமிநாதன் ஒருவருடைய வெற்றிக்குப் பிரதான காரணம் சம்பந்தப்பட்டவராக மட்டுமே இருக்க முடியும். வேண்டுமானால், இந்த வெற்றியை அவர் அடைவதற்கு அந்த அன்பரது தாயாரோ, தந்தையாரோ, மனைவியோ, மகன்களோ, மகள்களோ, நண்பர்களோ, உறவினர்களோ, அதிஷ்டமோ உதவி இருக்கக் கூடும். அதன்மூலம் அவர் வெற்றி அடைந்திருக்கலாம். ஆனால், அவரது உத்வேகத்தின் மூலமாகவே இந்த வெற்றி என்பதே உண¢மையாகும். உதவி வேற ...

Read more

படைப்பா? பரிணாமமா? – கூடை நிறைய புன்னகை

கூடை நிறைய புன்னகை தயாமலர் படைப்பா? பரிணாமமா? ஐசக் நியூட்டன், ரஜினிகாந்த், ஏ.ஆர்.ரஹ்மான்.. லேட்டஸ்ட்டாக அர்விந்த் கெஜ்ரிவால்.. இவர்களுக்கிடையே ஒரு பெரும் ஒற்றுமை இருக்கிறது. தான் என்கிற அகந்தையைத் தாழ்த்தி, எல்லாம் வல்ல தெய்வத்தை உயர்த்துகிற கடவுள் பக்தியில்தான் அப்படியோர் ஒற்றுமை! இந்திய மீடியா, அரசியல்வாதிகள், பொதுமக்கள் மட்டுமல்லாமல் சர்வதேசங்களும் கெஜ்ரிவாலை உற்றுநோக்கிக் கொண்டிருந்த தருணம் அது! தலைநகரி ...

Read more

நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் – திருநாளைப் போவார்

நந்தனார் சரித்திரக் கீர்த்தனைகள் கோபால கிருஷ்ண பாரதியார் சா.கந்தசாமி ‘ஐயே மெத்தக் கடினம் உனக்கடிமை ஐயே மெத்தக் கடினம் பொய்யாத பொன்னம்பலத்தை யாமிருக்குமிடம் நையா மனிதர்க்கு உய்யாது கண்டுகொள்ளும்’ என்ற பாட்டு ‘நந்தனார்’ சினிமாவில் தண்டபாணி தேசிகரால் பாடப்பட்டது. தமிழ் மக்கள் விரும்பிக்கேட்டு மகிழ்ந்த பாடல்களில் ஒன்று ‘ஐயே மெத்தக்கடினம்’ என்பது.  ஒரு நூற்றாண்டிற்கு முன்னால் ஆனை தண்டாபுரம் கோபாலகிருஷ்ண பாரதியார ...

Read more

© 2011 Powered By Wordpress, Goodnews Theme By Momizat Team

Scroll to top