மும்பையில் தவித்த தமிழர்கள் – உதவிய இயக்குநர்!

சினிமா
DIRECTOR-SUSI-GANESAN

 

கொரானாவுக்காக அமல்படுத்தபட்ட ஊரடங்கின் காரணமாக மும்பையில் மதுரை மற்றும் விருதுநகரைச் சேர்ந்த தொண்ணூறு தமிழர்கள் சொந்த ஊர் திரும்ப தவித்துள்ளனர். இந்த தகவல் அறிந்த தமிழ் சினிமா இயக்குனர் சுசி. கணேசன் தனக்கு தெரிந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன் என்பவர் உதவியுடன் அந்த தொண்ணூறு தமிழர்களும் சொந்த ஊர்களுக்கு திரும்ப செய்திருக்கிறார்.

இந்த உதவியைச் செய்துகொடுத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அன்பழகன் குறித்து சுசி.கணேசன் தன் முகநூலில், “ஐ.ஏ.எஸ். என்பது கவர்ச்சியான பதவியல்ல. களமிறங்கி செய்யும் பதவி என்பதை மனதில் ஆழமாக பதிய வைத்த சம்பவம் இது. நன்றிகள் பல. அன்பழகன் புரோ’’ என்று பதிவிட்டுள்ளார்.