சண்டைக் காட்சியில் டூப் போடாமல் நடித்த நயன்தாரா!

slider அரசியல்
NETRIKKAN

 

நடிகை நயன்தாராவின் காதலரும் இயக்குநருமான விக்னேஷ்  ‘ரவுடி பிக்சர்ஸ்’ சார்பில் தயாரிக்கும் முதல் படம்   ‘நெற்றிக்கண்’.  ‘அவள்’ படத்தின் இயக்குநர் மிலிந்த் ராவ் இந்தப் படத்தை இயக்கி வருகிறார். இது ஒரு க்ரைம் த்ரில்லர் படமாக உருவாகி வருகிறது. இதில் நயன்தாரா கண் பார்வையற்ற பெண்ணாக நடிக்கிறார்.

கடந்த 2011-ம் ஆண்டு வெளியான  ‘பிளைண்டு’ என்ற கொரியன் படத்தின் ரீமேக் என இந்தப் படம் குறித்து கூறப்படுகிறது.  படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் உள்ளது. ஊரடங்கு முடிந்தபிறகு மீதமுள்ள படப்பிடிப்புகளை நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்நிலையில் ’நெற்றிக்கண்’ படத்தின் எடிட்டர் லாரன்ஸ் கிஷோர்  சில தினங்களுக்கு ஒரு நேர்காணலில் இந்தப் படம் குறித்து சில தகவல்களை கூறியுள்ளார். அவர், “ரசிகர்களை சீட்டின் நுனிக்கே வரவைக்கும் திரில்லர் படம்  ‘நெற்றிக்கண்’. இப்படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் ரசிகர்களை நிச்சயம் கவரும். சண்டைக் காட்சிகளில் நயன்தாரா டூப் போடாமல் நடித்துள்ளார். இந்த படத்தில் வித்தியாசமான நயன்தாராவை ரசிகர்கள் பார்ப்பார்கள்”  என்று கூறியுள்ளார்.