போஸ்டரில் அசத்தும் டேனியல் பாலாஜி!

அரசியல் சினிமா
GOD MAN

 

சில வருடங்களுக்கு முன்பு நடிகர் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்த  ‘தாஸ்’ படத்தையும், இப்போது நடிகர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்துள்ள  ‘தமிழரசன்’ என்கிற படத்தை இயக்கியிருப்பவர் பாபு யோகேஸ்வரன். இந்தப் படம் கொரானா காரணமாக ரிலீஸ் ஆகாமல் தள்ளிப்போய் இருக்கிறது.

இந்நிலையில் பாபு யோகேஸ்வரன் ஒரு கிரைம் திரில்லர் பின்னணி கொண்ட வெப் தொடரை இயக்கி முடித்துள்ளார். இதில் டேனியல் பாலாஜி, சோனியா அகர்வால், ஜெயபிரகாஷ் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த வெப் தொடரின் தலைப்பு  ‘காட்மேன்’.  இது வரும் ஜூன் 12 -ம் தேதி ஜி- 5 தளத்தில் வெளியாகயுள்ளது. அடுத்ததாக இந்த வெப் தொடரின் டீசர் நாளை (24.5.2020) வெளியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தற்போது சமூக வலைத்தளத்தில் இந்த வெப் தொடர் போஸ்டர் வைரலாகி வருகிறது.  இந்த போஸ்டரில் தெரியும் டேனியல் பாலாஜியின் தோற்றம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.