திரிஷ்யம் – 2 படத்திலும் மோகன்லால்!

slider சினிமா
DRISYAM-2

 

கடந்த ஏழு வருடங்களுக்கு முன்பு ஜித்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் – மீனா நடித்து கேரளாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற படம்  ‘திரிஷ்யம்’. பாலியல் தொல்லை கொடுத்த இளைஞனை மகள் கொலை செய்து விடுகிறாள். அந்த மகளை  காப்பாற்ற போராடும் தந்தையாக மோகன்லால் நடித்திருப்பார். இந்தப் படத்தின் வெற்றி இந்தியா முழுவதும் அனைத்து மொழி திரையுலகினரையும் திரும்பி பார்க்க வைத்தது. இந்த ‘திரிஷ்யம்’ தமிழில் பாபநாசம் என்ற பெயரில் ரீமேக்கானது. இதில் கமல்ஹாசன், கவுதமி ஆகியோர் நடித்தனர். மேலும், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் சீன மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இப்போது ’திரிஷ்யம்’ படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க ஜித்து ஜோசப் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.  இதிலும் மோகன்லாலே ஹீரோவாக நடிக்கிறார். ஆனால்,  மீனா நடிப்பது இன்னும் உறுதியாகவில்லையாம். கேரளாவில் ஊரடங்கு முடிந்தவுடன் இதன் படப்பிடிப்பை தொடங்க திட்டமிட்டு உள்ளதாம் படக்குழு. அப்படி திரிஷ்யம் – 2 மலையாளத்திலும் தயாராகும்போது தமிழில் இதனையும் ரீமேக் செய்து கமல்ஹாசன் நடிக்கலாம் என்கிற எதிர்பார்ப்பும் கோலிவுட் வட்டாரத்தில் ஏற்பட்டிருக்கிறது.