ஜி.வி. பிரகாஷின் ‘செல்பி’!

slider சினிமா

 

SELFIE-GV-PRAKASH

 

நடிகர் ஜி.வி.பிரகாஷ் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ள புதிய படத்தை அறிமுக இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்குகிறார். இவர் இயக்குநர் வெற்றிமாறனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். ஒரு மாணவன் கல்லூரிக்கு வெளியே சந்திக்கும் பிரச்னைகளை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படம் காதல், எமோஷனல் கலந்து, முழுக்க முழுக்க கமர்ஷியல் படமாக உருவாகவிருக்கிறதாம்.

‘செல்பி’ என்று தலைப்பு வைத்துள்ள இந்தப் படத்தில் இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனனும்  நடிக்கிறார்.  ஜி.வி.பிரகாஷுடன் கவுதம் வாசுதேவ் மேனன் இணைவது இதுதான் முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது. இசையும் ஜி.வி.பிரகாஷ் தான். இவருக்கு ஜோடியாக வர்ஷா பொல்லம்மா நடிக்க இருக்கிறார். இவர்  ‘96’,  ‘பிகில்’ உள்ளிட்ட படங்களில் நடித்திருப்பவர்.