முந்தானை முடிச்சு ரீமேக்கில் சசிகுமார்!

slider சினிமா

 

கடந்த 1983-ம் ஆண்டு பாக்யராஜ் இயக்கத்தில் வெளியான படம் ’முந்தானை முடிச்சு.’. இந்தப் படத்தை பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏ.வி.எம். தயாரித்திருந்தது. இளையராஜா இசையமைத்திருந்தார். அப்போது பெரும் வசூல் படம் இது. இதன்பிறகு இந்தி, தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் இந்தப் படம் ரீமேக் செய்யப்பட்டது.

இந்நிலையில் சுமார்  37 ஆண்டுகளுக்கு பிறகு இந்தப் படம் இப்போது ரீமேக் செய்யப்படவிருக்கிறது. இதன் ரீமேக் உரிமையை ஏ.வி.எம். நிறுவனத்திடமிருந்து ஜே.எஸ்.பி. சதீஷ் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளது.  இப்போதும் இந்த படத்தை பாக்யராஜ் தான் இயக்கவுள்ளார். இதில் ஹீரோவாக சசிகுமார் நடிக்கிறார். மற்ற  நடிகர், நடிகைகள் தேர்வு மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் யார் யார் என்று ஊரடங்குக்கு பிறகு தெரிவிக்கப்படும் என்று பட நிறுவனம் சமீபத்தில் தெரிவித்துள்ளது.