கமலை பழிவாங்கும் விஜய் சேதுபதி!

slider சினிமா
KAMAL-VIJAYSETHUPATHY

 

நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் என்கிற அரசியல் கட்சி ஆரம்பித்திருந்தபோது ‘இந்தியன்-2’ படத்தில் நடிக்கத் துவங்கினார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடிவடையாத நிலையில்,  ‘தேவர் மகன்’ இரண்டாம் பாகம் என்று சொல்லப்படும்  ‘தலைவன் இருக்கின்றான்’ படத்திலும் கமல் நடித்து வருகிறார் என்கிற செய்திகள் உலாவந்தன. மேலும்,  தமிழின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி  ‘தலைவன் இருக்கின்றான்’ படத்தில் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

இந்த தகவல் இப்போது உறுதியாகவுள்ளது. மேலும், இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு என்ன கதாபாத்திரம் என்றும் தகவல்கள் கசிந்திருக்கிறது.  கசிந்த தகவலின்படி நாசரின் மகனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளராம். தேவர் மகன் படத்தில் நாசர் இறந்துவிடுவார். இந்த  இரண்டாம் பாகத்தில் அவரது மகனாக நடிக்கும் விஜய் சேதுபதி கமலை பழிவாங்க துடிப்பது போல கதை அமைக்கப்பட்டு இருப்பதாகவும் அந்த தகவல்கள் கூறுகின்றன.