வயது காரணமாக மணிரத்னம் பட வாய்ப்பு நழுவிய நடிகர்!

slider சினிமா
SANTHANU

 

நடிகரும், இயக்குநருமான பாக்யராஜ் மகன் சாந்தனுவும் நடிகர் தான். இவர்  ‘சக்கரகட்டி’ என்கிற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் நடிகராக அறிமுகமானார். இதன்பிறகு தங்கர்பச்சான் இயக்கத்தில் ‘அம்மாவின் கைபேசி’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தபோதும் பெரிய வரவேற்பு இவருக்கு கிடைக்காமல் இருந்தது. இந்நிலையில் இளைய தளபதி விஜய்யுடன் ’மாஸ்டர்’ படத்தில் சாந்தனு முக்கிய கதாபத்திரத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் தனக்கு திருப்புமுனையாக அமையும் என்று சாந்தனு எதிர்பார்த்து காத்திருக்கிறார். இதனிடையே இயக்குநர் மணிரத்னத்தின் ’பொன்னியின் செல்வன்’ படத்தில் சாந்தனு நடிக்கவிருப்பதாக தகவல் வெளியான வண்ணம் இருந்தது.

இதற்கு சமீபத்தில் நடிகர் சாந்தனு விளக்கம் கொடுத்துள்ளார். அந்த விளக்கத்தில், ‘’ ‘வானம் கொட்டட்டும்’ படத்தில் எனது நடிப்பை பார்த்த மணிரத்னம் படத்தின் இயக்குநர் தனாவிடம் பாராட்டி இருக்கிறார். அந்த சமயத்தில் ‘பொன்னியின் செல்வன்’ படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் என்னை நடிக்க வைக்கலாம் என்று மணிரத்னம்  யோசித்துள்ளார். ஆனால், இதன் பின்னர் வயது வித்தியாசம் காரணமாக அவர் அந்த யோசனையை கைவிட்டுவிட்டார். எனவே, நான் அந்த படத்தில் நடிக்கவில்லை’’ என்று கூறியுள்ளார்.