கிறிஸ்துமஸ் தினத்தில் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’!

slider சினிமா

 

DOCTOR-SIVAKARTHIKEYAN

 

நடிகை நயன்தாரா கதையின் நாயகியாகவும், அவரை ஒரு தலையாக காதலிக்கும் கதாபாத்திரத்தில் யோகிபாபுவும் நடித்த படம்  ‘கோலமாவு கோகிலா’. இந்தப் படத்தின் இயக்குநர் நெல்சன் தனது அடுத்த படமாக சிவகார்த்திகேயனை வைத்து இயக்கும் படம் ’டாக்டர்’. இதில் இவருக்கு ஜோடியாக பிரியங்கா நடித்கிறார்.  இவர்களுடன் யோகிபாபு,  வினய் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இசை அனிருத்.

இப்படத்தின் படப்பிடிப்பு கொரானாவுக்கு முன்பு வேகமாக நடைபெற்று வந்தது. இதன்பிறகு கொரானாவினால் பட்ப்பிடிப்பு  தடைபட்டது.  இறுதிக்கட்ட படப்பிடிப்பை கோவாவில் படமாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டபடி யாவும் முடிந்தால் டிசம்பர் மாதம் 25ம் தேதி கிறிஸ்துமஸ் அன்று படத்தை வெளியிடும் வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.