ராஜ்மவுலியின்  ‘ஆர்.ஆர்.ஆர்.’ படத்தில் இணைந்த தமன்னா!

slider சினிமா

 

தெலுங்கில் பிரமாண்ட தயாரிப்பாக உருவான ‘பாகுபலி’ இந்தியாவெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தப் படத்தின் மூலம் நடிகர் பிரபாஸ், நடிகைகள் அனுஷ்கா, தமன்னா ஆகியோர் பெரியளவில் பிரபலமானார்கள். இதில் ‘பாகுபலி’ இரண்டாம் பாகத்தில் கதாநாயகி அனுஷ்கா நடித்ததுபோல முதல் பாகத்தில் தமன்னாவும் நடித்திருந்தார். இதனால் இயக்குநர் ராஜ்மவுலியின் அடுத்தடுத்த படங்களில் தமன்னாவும் கண்டிப்பாக இடம் பெறுவார் என்கிற எதிர்பார்ப்பு டோலிவுட் வட்டாரத்தில் உருவாகியது.

இந்நிலையில் தற்போது ராஜ்மவுலி இயக்கிவரும் ‘ஆர்.ஆர்.ஆர்’ படத்தில் தமன்னா இடம்பெறவில்லை. இது டோலிவுட் வட்டாரத்தில் பெரும் பேச்சாகியது. இந்தப் படத்தின் 75 சதவீத படப்பிடிப்பு முடிந்த நிலையில் இப்போது இந்தப் படத்தில் தமன்னா இடம்பெறுவது உறுதியாகியுள்ளது. இதில் ஒரு சண்டைக் காட்சியில் தமன்னா நடிக்கிறார் என்றும் அந்த சண்டை காட்சி தமன்னாவுக்காக திணிக்கப்படவில்லை என்றும்,  திரைக்கதையில் இப்படி ஒரு காட்சி வருகிறது என்றும் படக்குழுவினர் சமீபத்தில் கூறியுள்ளார்கள்.