’மாஸ்டர்’ படத்தில் கார் சேஸிங் – வியக்கும் நடிகை!

slider சினிமா

நடிகை ஆண்ட்ரியாவை இயக்குநர் கௌதமேனன் ‘வேட்டை விளையாடு’ படத்தில் பாடகியாக அறிமுகப்படுத்தினார். இதன்பினர் தனது ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ படத்தில் நடிகையாகவும் அறிமுகப்படுத்தினார். அதுமுதல் ‘ஆயிரத்தில் ஒருவன்’,  ‘வடசென்னை’ , ‘தரமணி” உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா, இதன்பிறகு கொஞ்சம் இடைவெளிவிட்டு நடித்துள்ள படம் ‘மாஸ்டர்’.

ஆண்ட்ரியாவுக்கு ’மாஸ்டர்’ படத்தில் முக்கிய கேரக்டர் என்றும் கூறப்படுகிறது. ’மாஸ்டர்’ படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் இளைய தளபதி விஜய் பேசுகையில், ‘’ஆண்ட்ரியா தொடர்ந்து அதிக படங்களில் நடிக்க வேண்டும்’’ என்று கூறியது பலரையும் கவனிக்க வைத்தது. சமீபத்தில் நடிகை ஆண்ட்ரியா அளித்த பேட்டி ஒன்றில் “மாஸ்டர்’ படப்பிடிப்பின்போது தான் விஜய்யின் மிகப்பெரிய ரசிகையாகி விட்டேன். மேலும், ’மாஸ்டர்’ படத்தில் ஒரு கார் சேஸிங் காட்சி சிறப்பு அம்சமாக இருக்கும். அந்தக் காட்சி என்னால் மறக்கமுடியாத ஒன்றாகும்’’ என்று கூறியுள்ளார்.