ரஜினியை வைத்து கமல் தயாரிக்கும் படம் வருமா? வராதா?

slider சினிமா

 

தமிழ் சினிமாவின் இருபெரும் சினிமா பிரபலங்களான ரஜினியும், கமலும் தங்களது ஆரம்ப கால சினிமா வாழ்க்கையில் அதிக படங்களில் இணைத்து நடித்திருந்தனர். பின்னர் இருவரும் தனித்தனி ஹீரோக்களாக நடிக்க ஆரம்பித்தபிறகு கடந்த 25 வருடங்களுக்கு மேல் எந்தவொரு படத்திலும் இணைந்து நடிக்கவில்லை.

இப்போது கமல் அரசியல் கட்சி ஆரம்பித்து தலைவராகவும் ஆகிவிட்டார். ரஜினியும் கட்சி ஆரம்பிக்கும் முயற்சிகளில் இருந்து கொண்டிருக்கிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் கமல்ஹாசன் தயாரிக்க ரஜினி நடிப்பார் என்றும் அந்தப் படத்தை  லோகேஷ் கனகராஜ் இயக்குவார் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில் ரஜினிகாந்தின் ‘அண்ணாத்த’ தீபாவளிக்கு திரைக்கு கொண்டு வரவும் திட்டமிட்டனர். ஆனால், கொரோனா ஊரடங்கினால் ‘அண்ணாத்த’ படம் பாதியில் நிற்கிறது.  கடந்த இரண்டு மாதங்களாக இந்த படத்தின் பணிகள் எதுவும் நடக்கவில்லை.  இந்த தாமதம் காரணமாக ‘அண்ணாத்த’ வெளியீடு அடுத்த வருடம் பொங்கலுக்கு தள்ளி வைக்கப்பட்டு உள்ளது. மேலும், ரஜினிகாந்த் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தீவிர அரசியலில் ஈடுபடவுள்ளதாகவும், இதன் காரணமாக கமல்ஹாசன் தயாரிக்கும் படத்தில் அவர் நடிக்க மாட்டார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனாலும் படக்குழுவினர் தற்போது வரை இது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.