ரிலீஸ்  தள்ளிப்போகும் ‘அவதார்’ இரண்டாம் பாகம்!

slider சினிமா

 

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் வெளியான  ‘டைட்டானிக்’ படம்  உலக சினிமா ரசிகர்களையே வியக்க வைத்தது. இந்தப் படத்தின் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன். இவரது இன்னொரு பிரமாண்ட படமாக 2009-ம் ஆண்டு வெளியான படம் தான்  ‘அவதார்’. இந்த படம் உலக அளவில் பெரிய வசூல் சாதனை புரிந்தது. இதற்கு மூன்று ஆஸ்கார் விருதுகளும் கிடைத்தது

இதன்பின்னர் இந்தப் படத்தின் நான்கு பாகங்கள் தயாராகும் என்று அறிவித்தனர்.  இந்த அறிவிப்பு  ரசிகர்கர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியது. அடுத்த பாகங்களுக்கான படப்பிடிப்புகள் ஆரம்பமாகின. குறிப்பாக, இரண்டாம் பாகம் மற்றும் மூன்றாம் பாகத்துக்கான படப்பிடிப்புகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன.  இந்தாண்டு டிசம்பர் மாதம்  இரண்டாம் பாகம் ரிலீஸாக இருந்தது. ஆனால், கொரானா காரணத்தினால் ரிலீஸ் தேதியை
2021 டிசம்பர் 17-ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளனர்.

நியூஸாந்தில்  ‘அவதார்’ படத்துக்கு அரங்குகள் அமைத்து ஜேம்ஸ் கேமரூன் படப்பிடிப்பை நடத்தும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இந்த நான்கு பாகங்களுக்கான மொத்த பட்ஜெட் 7500 கோடி என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.