கவர்ச்சியான வேடங்களில் நடிக்கமாட்டேன் – ப்ரியா பவானி சங்கர்!

slider சினிமா

 

PRIYA-BHAVANI-SHANKAR 

சின்னத் திரையிலிருந்து வெள்ளித் திரை வந்தவர் பிரியா பவானி சங்கர்.    இவர் நடிப்பில் வெளியான ‘மேயாத மான்’ ‘மான்ஸ்டர்’, ‘மாபியா’ ஆகிய படங்கள் இவருக்கு வெள்ளித் திரையில் முக்கிய இடத்தை பெற்றுத் தந்தன. தற்போது இவர்  ‘இந்தியன்-2’ படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் இவருக்கு கமல்ஹாசனின் சினேகிதி வேடம். இதற்கடுத்து விஷால் ஜோடியாக ஒரு படத்திலும், ராகவா லாரன்ஸ் ஜோடியாக இன்னொரு படத்திலும், ஹரீஷ் கல்யாண் ஜோடியாக மற்றொரு படத்திலும் மீண்டும் எஸ்.ஜே.சூர்யா ஜோடியாக ‘பொம்மை’ என்ற படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இவர் தற்போது ஒரு பேட்டியில், “என் முகத்துக்கும், உடற்கட்டுக்கும் கவர்ச்சி வேடங்கள் செட் ஆகாது. அதனால் ஒருபோதும் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன். கவர்ச்சியான கதாபாத்திரங்களை கொண்ட சில புதிய பட வாய்ப்புகள் எனக்கு வந்தன. நடிக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டேன்’’ என்று கூறியுள்ளார்.