குழப்பத்தில் கமல் படம்! 

slider சினிமா

 

இந்தியன்-2

 

பிரபல சினிமா நிறுவனமான லைக்கா, கமல் நடிக்க ஷங்கர் இயக்க  ‘இந்தியன்-2’ படத்தை ஆரம்பித்தது. ஆனால், இந்தப் படத்தின் ஆரம்பம் தொடங்கி ஒவ்வொரு கட்டத்திலும் பல்வேறு தடைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. உதாரணமாக, கடந்த ஆண்டு (2019)  ஜனவரி மாதம் படப்பிடிப்பு தொடங்கிய சில மாதங்களில் பாராளுமன்ற தேர்தல் வந்தது. இது முன்னிட்டு தனது கட்சிகாக கமல் தமிழகம் முழுவதும் பிரசாரத்திற்கு சென்றார். இதனால், இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில காலம்  தடைபட்டது. அடுத்து  ‘பிக்பாஸ்’ தொலைக்காட்சி நிகழ்ச்சி முன்னிட்டும் தடைபட்டது.

இவற்றைக் கடந்து இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. ஆனால், பிப்ரவரி 19-ம் தேதி படப்பிடிப்பில் கிரேன் அறுந்து விழுந்ததில் மூன்று பேர் பலியானார்கள். படப்பிடிப்பு தளத்தில் நடந்த இந்த திடீர் விபத்து காரணமாக படப்பிடிப்பு ரத்தானது. இந்த விபத்து தொடர்பாக கமல்ஹாசனுக்கும், லைக்கா நிறுவனத்துக்கும் இடையே உரசல் ஏற்பட்டது. கடிதம் மூலமாக ஒருவரை ஒருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வந்தனர்.

இந்த விவகாரம் மோதலாக மாறியதால் படம் கைவிடப்பட்டதாக  சில தினங்களுக்கு முன்புகூட செய்திகள் வெளிவந்தது. ஆனால், இது குறித்து லைக்கா, “இந்தியன்- 2 படம் குறித்து பரவும் செய்தி உண்மையல்ல. அது வெறும் வதந்தி. தற்போது அறுபது சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. ஊரடங்கு முடிந்தபின் எஞ்சியுள்ள காட்சிகள் படமாக்கப்படும்’’ என்று தெரிவித்தது. என்றாலும், இந்தப் படம் குறித்து பெரும் குழப்பம் நீடிப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.