அஜித், விஜய் பற்றி மனம் திறந்த நடிகை!

slider சினிமா

 

TAMANNA

 

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான தமன்னா அஜித்துடன்   ‘வீரம்’ படத்திலும் விஜய்யுடன்  ‘சுறா’ படத்திலும் நடித்துள்ளார். இதுதவிர விஷால், கார்த்திக் போன்றவர்களுடனும் நடித்துள்ளார். தெலுங்கில்  ‘பாகுபலி’ படம் உட்பட பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இப்போதும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தென்னிந்திய திரையுலக ரசிகர்கள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார். அந்த பேட்டியில் தமன்னா, “தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் நான் ஆச்சர்யப்படும் வி‌ஷயம், அவர்களைப் பொறுத்தவரை திரைப்படங்கள் அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய அங்கம் வகிக்கிறது. அது அவர்களது கலாசாரத்தின் ஒரு பகுதியாக, அவர்களது வாழ்வோடு பின்னிப்பிணைந்த  வி‌ஷயமாக இருக்கிறது.

தமிழ் சினிமாவில்  ‘வீரம்‘ தான் அஜித்துடன் எனக்கு முதல் படம். மிகப்பெரிய கமர்சியல் வெற்றியாக அமைந்த படம் அது. அது ஒரு கமர்சியல் படமாக இருந்தாலும் ஒரு நடிகையாக எனக்கு நடிக்க அதிக சந்தர்ப்பங்களை வழங்கிய படம். எனக்குத் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தை ஏற்படுத்திக் கொடுத்த படம். விஜய், அஜித் இருவரும் வெவ்வேறு குணாதிசயங்களைக் கொண்டவர்கள். நம் தலைமுறை மட்டுமல்லாது இனி வரப்போகிற தலைமுறைகளையும் மகிழ்விக்கும் நடிகர்களாகவும் அவர்கள் இருப்பார்கள். இருவருக்குமே அற்புதமான ரசிகர் கூட்டம் உள்ளது. தொடர்ந்து அந்த ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று நினைக்கிறேன்’’ என்றுகூறியுள்ளார்.