பாகுபலி ஹீரோவுக்கு வில்லனாகும் அரவிந்த் சாமி!

slider சினிமா
ARVIND-SWAMI

 

‘பாகுபலி’ படத்தின் மூலம் கிடைத்த பிரபலத்தால் நடிகர் பிரபாஸ் பாலிவுட்டில் ‘சாஹோ’ என்கிற படத்திலும் நடித்தார். தற்போது பிரபாஸ் தனது 21-வது படமாக, முன்னாள் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்றை  ‘மகா நடிகை’ என்கிற பெயரில் படமாக இயக்கிய தெலுங்கு இயக்குநர் நாக் அஸ்வின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இந்தப் படத்தில் வில்லனுக்கு பவர்புல் கேரக்டராம்.

இதில் வில்லனாக அரவிந்த் சாமியை நடிக்கவைக்க படக்குழு முடிவு செய்து இது குறித்து அரவிந்த் சாமியிடம் பேசிவிட்டார்களாம். அரவிந்த் சாமி தரப்பில் சம்மதித்து விட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு முன்பு  ‘தனி ஒருவன்’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான  ‘துருவா’ படத்திலும் அரவிந்த் சாமி வில்லனாக நடித்துள்ளார் என்பதும் கவனித்தக்கது.