திகில் கதையில் நடிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ்!

slider சினிமா
AISWARYA-RAJESH

 

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்  ‘ரம்மி’,  ‘காக்கா முட்டை’,  ‘தர்மதுரை’ மற்றும்  ‘கனா’ படங்களில் தனது நடிப்பு திறமையை நிரூபித்திருக்கிறார். ரசிகர்களின் பாராட்டையும் பெற்றிருக்கிறார். ஆனால், இதுவரை ஐஸ்வர்யா ராஜேஷ் எந்தவொரு திகில் படத்திலும் நடித்ததில்லை. இந்த பிரேக் விரைவில் உடைய போகிறது.

அறிமுக இயக்குநர் விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் உருவாகிவரும் மிஸ்ட்ரி திரில்லர் வகை படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். இவரை மையமாக வைத்துதான் கதையே நகர்கிறதாம். இந்தப் படத்தின் பெயர்  ‘திட்டம் இரண்டு’.  இந்தப் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்திருகிறது. அடுத்தகட்ட படப்பிடிப்புகள் கொரோனா லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்க இருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.