விண்வெளியில் எடுக்கப்படும் முதல் படம்!

slider சினிமா
TOM-CRUISE

 

ஹாலிவுட்டில் தற்போது மிகவும் பிரபலமான நடிகராக இருந்து வருபவர் டாம் குரூஸ். இவருக்கு உலகமெங்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். டாம் குரூஸ் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு  விண்வெளியில் நடத்தவுள்ளது. இது குறித்து  அமெரிக்க பத்திரிகைகளில் செய்தி வெளியாகி வருகின்றன. இந்த தகவலை விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசாவும் உறுதிப்படுத்தியுள்ளது.

இது குறித்து நாசா நிர்வாகி ஜிம் பிரிடெஸ்டைன் தனது டுவிட்டரில் “விண்வெளி நிலையத்தில் டாம் குரூஸுடன் இணைந்து பணியாற்றுவதில் நாசா உற்சாகமாக இருக்கிறது. நாசாவின் லட்சியத் திட்டங்களை நனவாக்குவதற்காக புதிய தலைமுறை பொறியாளர்களையும் விஞ்ஞானிகளயும் ஊக்குவிக்க பிரபலமான மீடியா தேவை’’ என்று பதிவிட்டுள்ளார். இந்தப் படம் தொடங்கப்பட்டால் விண்வெளியில் படமாக்கப்படும் முதல் படமாக இது இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.