முதன்முதலாக விஜய்க்கு இசையமைக்கும் தமன்!

slider சினிமா
THAMAN MUSIC DIRECTOR

 

‘மாஸ்டர்’ படம் நடிகர் விஜய்க்கு 64-வது படம். இதற்கடுத்து விஜய் நடிக்கும் 65-வது படம் பற்றிய பல்வேறு தகவல்கள் சில வாரங்களாக வந்தவண்ணமிருந்தன. இப்போது இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது உறுதியாகிவிட்டது. அதேநேரத்தில் இயக்குநர் யார் என்பது குறித்து இன்னும் உறுதியாகவில்லை. என்றாலும், ஏ.ஆர்.முருகதாஸாக இருப்பதற்கு அதிக வாய்ப்பிருப்பதாகவும் கோலிவுட்டில் ஒரு பேச்சு கிளம்பியுள்ளது.

“விஜய் படத்தில் பணியாற்ற ஆர்வமாக இருக்கிறேன். கடந்த மூன்று வருடமாக இதற்காக மெனக்கிட்டேன். தற்போது தான் சரியான நேரம் வந்துள்ளது. இத் தருணம் மகிழ்ச்சியாக உள்ளது’’ என்று தமன் ஒரு பேட்டியில்  குறிப்பிட்டுள்ளதை வைத்துப் பார்க்கும்போது, இசையமைப்பாளர் தமன் என்பது உறுதியாகிறது.