விவசாயத்தில் இறங்கிய தமிழ் நடிகை!

சினிமா
KEERTHI-PANDIAN

 

கடந்த ஆண்டு வெளியான  ‘தும்பா’ படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார்  பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன். இதனையடுத்து மலையாளத்தில் வெற்றிபெற்ற ’ஹெலன்’ படத்தின் தமிழ் ரைட்ஸை அருண் பாண்டியன் பெற்று மகள் கீர்த்தி பாண்டியனை ஹீரோயினாக்கி படம் தயாரிக்கிறார். இந்த படத்தை ’இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய  கோகுல் இயக்குகிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கவும் கொரானாவினால் படப்பிடிப்புகள் ரத்து செய்யவும் ஏறக்குறை சரியாக நடந்துவிட்டது. இதனால் இந்தப் படத்தின் ஹீரோயின் கீர்த்தி பாண்டியன் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்ய தொடங்கிவிட்டார். சில தினங்களுக்கு முன்பு டுவிட்டரில்  ஒரு வீடியோ வெளியிட்டிருந்தார். அதில், டிராக்டர் மூலம் கீர்த்தி பாண்டியன் விவசாய நிலத்தை உழுகிறார். அடுத்து அந்த நிலத்தில் நாத்து நடுகிறார். மேலும்,  என் வாழ்வில் மிகவும் சிறப்பான ஒரு செயலை செய்திருக்கிறேன்” என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.