விஜய் ஆண்டனி முடிவு – தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சி!

slider சினிமா
Vijay Antony

நடிகர் விஜய் ஆண்டனி, பெப்சி சிவா தயாரிப்பில் ‘தமிழரசன்’ என்கிற படத்திலும், அம்மா கிரியேஷன்ஸ் டி .சிவா தயாரிப்பில் ‘அக்னிச் சிறகுகள்’ என்கிற படத்திலும், ஓபன் தியேட்டர் மற்றும் இன்பினிட்டி பிலிம் வென்சர்ஸ் தயாரிப்பில் ‘காக்கி’ என்கிற படத்திலும் நடித்து வருகிறார். இன்னும் சில பகுதிகள் இந்த படங்களுக்கான படப்பிடிப்பு மீதமிருக்கும் நிலையில் கொரானாவினால் இந்தப் படங்களின் படப்பிடிப்புகள் தள்ளிப் போவதால் தயாரிப்பாளர்களுக்கு ஏற்படும் நஷ்டத்தை கருத்தில் கொண்டு  தனது  சம்பளத்தில் 25 சதவீதத்தைக் குறைத்துக் கொள்வதாக நடிகர் விஜய் ஆண்டனி தற்போது அறிவித்துள்ளார். ஏறக்குறைய ஒரு கோடி ரூபாய் அளவுக்கு இதன்மூலம் விஜய் ஆண்டனி விட்டுக் கொடுக்கிறார் என்கிறார்கள். இது முன்னிட்டு தயாரிப்பாளர்கள் டி சிவா, தனஞ்செயன், சுரேஷ் காமாட்சி ஆகியோர் விஜய் ஆண்டனிக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.