‘மாஸ்டர்’  படம் ரிலீஸ் – விஜய் எடுத்த முடிவு!

slider சினிமா
VIJAY-MASTER-SELFIE

 

இளைய தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ முடிவடைந்து கடந்த ஏப்ரல் 9–ம்  தேதி அன்று  படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. விஜய் ரசிகர்களும் இந்தப் படத்தை அமர்க்களமாக கொண்டாடத் தயாராகியிருந்தனர். ஆனால், கொரோனாவினால் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது. இதனிடையே ‘மாஸ்டர்’ படத்தை நேரடியாக ஓடிடி-யில் (இணையத்தில்) வெளியிட பிரபல நிறுவனம் முயற்சி மேற்கோண்டுள்ளதாக செய்திகள்  வலம் வர ஆரம்பித்தது.

இந்த தகவலை படக்குழு ஏற்கெனவே மறுத்துள்ளது. இதில் இப்போது நடிகர் விஜய்யும் தன் கருத்தை வெளிப்படுத்தியிருப்பதாகவும், ரசிகர்கள் தியேட்டரில் வந்து கொண்டாடுவதற்காக தான் படத்தை எடுத்துள்ளோம்,  ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய அல்ல என்று விஜய் கூறியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் நடிகை ஜோதிகாவின் ’பொன்மகள் வந்தாள்’, திரிஷாவின்  ‘பரமபதம் விளையாட்டு’,  நடிகர் சித்தார்த்தின் ’டக்கர்’, சந்தானத்தின்  ‘சர்வர் சுந்தரம்’ ஆகிய படங்கள் நேரடியாக ஓடிடி-யில்  விரைவில் ரிலீஸ் செய்யவிருப்பதும் குறிப்பிடத்தக்கது.