சாய் பல்லவியின் நடிப்பை பாராட்டிய சமந்தா

slider சினிமா

 

SAI-PALLAVI-SAMANTHA

 

நடிகை சாய் பல்லவி நடித்து கடந்த 2015- ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘பிரேமம்’ பெரியளவில் பிரபலமாகியது. இதன்பிறகு தெலுங்கில் ஒரு சில படங்களில் நடித்து தமிழிலும்  ‘கரு’,     ‘மாரி- 2’, ’என்.ஜி.கே.’ ஆகிய படங்களில்  நடித்தார். ஆனால் இந்தப் படங்கள் அவருக்கு கைகொடுக்கவில்லை.

என்றாலும், தெலுங்கில் சாய் பல்லவி நடித்த படங்கள் தொடர்ந்து வெற்றிப் படங்களாக அமைந்து வருகிறது. குறிப்பாக,   ‘பிடா’, ’மிடில் கிளாஸ் அப்பாயி’, ’பதி பதி லேச்ச மனசு’ ஆகிய படங்களைச் சொல்லலாம்.  தற்போது சேகர் கம்முலா இயக்கத்தில் நடிகை சமந்தாவின் கணவர் நாக சைதன்யாவின் ஜோடியாக ‘லவ் ஸ்டோரி’ என்கிற படத்தில் நடித்துவருகிறார் சாய் பல்லவி.  இந்தப் படத்திற்கு இன்னும் சில நாட்கள்தான் படப்பிடிப்பு நடத்தப்பட வேண்டியுள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்க்கும் விருப்பத்தை இயக்குனரிடம் வெளிப்படுத்தி இருக்கிறார் சமந்தா. இயக்குனரும் இதுவரை எடுத்து எடிட் செய்யப்பட்ட படத்தை சமந்தாவிற்கு போட்டுக் காட்டியிருக்கிறார். இதைப் பார்த்த  சமந்தா, ‘இந்த படத்தில் நாக சைதன்யாவை விட சாய் பல்லவி தான் டாமினேட் செய்கிறார்,’ என்று இயக்குனரிடம் கூறியிருக்கிறார் என்று டோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.