அதர்வாவுக்கு அமைந்த அழகிய ஹீரோயின்!

slider சினிமா
LAVANYA-TRUPATHY

 

தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் புதிய படத்துக்கு இன்னும் தலைப்பு முடிவாகவில்லை. இதில் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார். புதுமுகம் ரவீந்திர மாதவா இயக்குகிறார். இவர் இயக்குனர்கள்  பூபதி பாண்டியன், சுசீந்திரன், தெலுங்கு டைரக்டர் கொரட்டால சிவா ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்தவர்.

இந்தப் படம் குறித்து சில விஷயங்களை தற்போது பகிர்ந்துக் கொண்டுள்ளார் ரவீந்திர மாதவா. அவர் கூறுகையில், ’’இந்தப் படத்தின் ஹீரோ அதர்வா  அவர் கேரக்டருக்கு  நூறு சதவீதம் பொருத்தமாக இருப்பார். எங்களுக்கு ஹீரோயினை தேர்வு செய்வதில் நிறைய சிரமம் ஏற்பட்டது. ஹீரோயினைத் தேர்ந்தெடுக்க ஏறக்குறைய பல மாதங்கள் ஆகிவிட்டது. அழகு, மென்மை, நடிப்பு திறமை ஆகிய மூன்றும் கலந்தவராக இருக்க வேண்டும். படத்தில் அவர் சும்மா வந்து போகிறவராக இல்லை. வில்லனை நேருக்கு நேர் எதிர்கொள்ளும் கடினமான கேரக்டர். அப்படி ஒருவரை தேர்வு செய்ய அதிக முயற்சி எடுத்து தேடினோம். சுமார் 66 அழகிய தோற்றம் கொண்ட பெண்களை பார்த்தோம். கடைசியாக லாவண்யா திரிபாதியை செலக்ட் செய்தோம். இவர் தனது அழகாலும், நடிப்பு திறமையாலும் ஒட்டுமொத்த ரசிகர்களையும் நிச்சயம் கவர்வார் ’’ என்று கூறியுள்ளார்.