தெலுங்கு பாடலுக்கு ஆடிய ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்!

slider சினிமா விளையாட்டு
DAVID-WARNER-TIKTOK

 

தெலுங்கில் இளம் நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் பூஜா ஹெக்டே நடித்த   ‘அல வைகுந்தபுரம்லு’ படம் பெரும் வெற்றியை பெற்றது. இந்தப் படத்தில் இடம்பெற்ற  ‘புட்ட பொம்மா….’ பாடல் மிகவும் பிரபலமானது. இந்த பாடலில் இவர்கள் ஆடும் நடனமும் சமூக வலைத்தளங்களில் பெரியளவில் டிரெண்ட்டானது. ரசிகர்கள் பலரும் அந்த பாடலுக்கு நடனம் ஆடி டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது  ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், தனது மனைவி மற்றும் மகள் உடன் சேர்ந்து  ‘புட்ட பொம்மா….’ பாடலுக்கு அதேபோன்ற நடன அசைவுகள் கொடுத்து  ஆடியுள்ளார். இந்த டிக் டாக் வீடியோவை  தனது இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டுள்ளார் டேவிட் வார்னர். இந்த வீடியோ  இணையத்தில் அதிக வேகமாக வைரலாகி வருகிறது. இதற்காக நடிகர் அல்லு அர்ஜுன் வார்னருக்கு நன்றி தெரிவித்துள்ளார்..