விரைவில் வட கொரியாவில் அதிகார மாற்றம் – பெரும் பரபரப்பு!

slider உலகம்
jim jong un

 

உலக வல்லரசான அமெரிக்காவையே  ‘வந்து பார்’ என்று சவால் விட்ட நாடு வட கொரியா. இதன் அதிபர் கிம் ஜாங் உன் நடவடிக்கைகள் அனைத்தும் அமெரிக்காவை ஆத்திரமூட்டும் வகையிலேதான் இருந்து வந்தன. இவரும் அமெரிக்க அதிபர் டிரம்பும் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுபட்டது உலகம் அறிந்த ஒன்று. இதை முன்னிட்டு வடகொரியா – அமெரிக்கா இடையே போர் ஏற்பட போவதாகக்கூட செய்திகள் தோன்றின. ஆனால், திடீரென்று டிரம்பும், கிம் ஜாங் உன்னும் சந்தித்தும் பேசினர். ஆனாலும் வட கொரியா மீது அமெரிக்கா ஒரு பருந்து பார்வையை தொடரந்து வைத்திருக்கிறது.

இந்நிலையில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடல் நிலை பற்றி பல்வேறு முரண்பட்ட தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் தொடர்ச்சியாக வட கொரியாவில் விரைவில் அதிகார மாற்றம் நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாவதால் இது உலகளவில் பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது.

குறிப்பாக, கிம்ஜாங் உன் உடல்நிலை பற்றி முரண்பட்ட தகவல்கள் ஒவ்வொரு நாளும் வந்து கொண்டிருக்கிறது. அவருக்கு மூளைசாவு ஏற்பட்டுள்ளது என்றும், அவருக்கு இதய அறுவை சிகிச்சையின்போது ஏற்பட்ட தவறால் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும், இனி அவரால் எழுந்து நிற்கவோ, நடக்கவோ முடியாது என்றும் தகவல்கள் வந்துகொண்டே இருக்கிறது.

இதன் அடுத்தகட்டமாக கிம்ஜாங் உன் பதவிக்கு வரக்கூடியவர்கள் என்று இரண்டு பெயர்கள் சர்வதேச ஊடகங்களில் அடிபடுகிறது. ஒன்று அவர் தங்கை சகோதரி கிம் யோ ஜாங்க். இவருக்கு 31 வயது ஆகிறது. இவருக்கு அதிக வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. அடுத்து கிம் ஜாங் உன்னின் தந்தையும், மறைந்த அதிபருமான கிம் இல் சுங்கின் கடைசி மருமகனும்,  தற்போதையஅதிபர் கிம் ஜாங் உன்னின்  மாமாவுமான கிம் பியோங் பெயர் சொல்லப்படுகிறது. இவருக்கு 65 ஆகிறது.  இவர் 40 ஆண்டுகளுக்கும் மேலாக, ஹங்கேரி, பல்கேரியா, பின்லாந்து, போலந்து உள்ளிட்ட நாடுகளில் வட கொரியாவுக்கான துாதரகங்களில் உயர் பொறுப்பில் இருந்தவர்.

வட கொரிய அதிபரின் உடல்நிலை குறித்த மர்மம் கடந்த இரண்டு வாரத்துக்கும் மேலாகவே நீடித்து வரும் நிலையில், அடுத்த சில நாட்களில் உண்மைத் தகவல்கள் நிச்சயமாக வெளிவரும் என்கிறது தென்கொரிய செய்தி நிறுவனங்கள்.

  • எஸ்.சிவாநந்தன்