நிவாரண உதவியில் அசத்தும் ஓ.பி.எஸ். மகன்!

slider அரசியல்

 

கடந்த மே மாதம் நடைபெற்ற பாராளுமன்ற பொதுத் தேர்தலில்  தமிழகத்தில் தி..மு.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. ஆளும் கட்சியான அ.தி.மு.க தேனி பாராளுமன்றத் தொகுதியைத் தவிர போட்டியிட்ட மற்ற அனைத்து தொகுதிகளிலும் தோல்வி கண்டது. அ.தி.மு.க.வின் கூட்டணி கட்சிகளும்கூட ஓர் இடத்திலும் வெற்றி பெறவில்லை. அ.தி.மு.க. வெற்றி பெற்ற தேனி பாராளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் துணை முதல்வர் ஓ.பன்னீர் செலவத்தின் மகன் ஓ.பி.ரவீந்திரகுமார். இந்த வெற்றி இன்றுவரைகூட அ.தி.மு.க.வுக்கு அப்பாலும் பலரால் வியந்து பேசப்படுகிறது. அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தேனி மாவட்டத்தை அ.தி.மு.க.வின் கோட்டையாக்க ரவீந்திரநாத் களம் இறங்கியுள்ளதாக கூறப்படுகிறது.

கொரானா நோயை கட்டுப்பாட்டுக்குள் வைக்கவும், மேற்கொண்டு பரவுவதைத் தடுக்கவும் தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தமிழக அரசு சார்பில் மாநிலமெங்கும் ஏழை மக்கள் பயன்பெறும் விதமாக பல்வேறு நிவாரண பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆனால், அ.தி.மு.க. கட்சி சார்பில் ஒட்டுமொத்த மாநில அளவில் அமைப்பு ரீதியாக ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் செய்யும் காரியங்கள் பெரிதாக எதுவும் நடைபெறவில்லை. இதில் தி.மு.க. பலபடிகள் முன்னிலையில் உள்ளது. தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆரம்பித்துள்ள ஒன்றிணைவோம் திட்டம் வெகுஜன மக்களுக்கு பெரும் உதவிகரமாக இருந்து வருகிறது. இதற்கு சமமாக ஆளும் கட்சியான அ.தி.மு.க.வின் நடவடிக்கைகள் இல்லை என்கிற குற்றச்சாட்டும் பரவலாக இருந்து வரும் நிலையில், விதிவிலக்காக தேனி பாராளுமன்றத் தொகுதி எம்.பி.யும், துணை முதலமைச்சரின் மகனுமான ஓ.பி.ரவீந்திரநாத் தினசரி மாவட்டம் முழுவதும் வலம்வந்து கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்து பேசி உணவு உட்பட நிவாரண உதவிகள் தேவைபடுபவர்களுக்கு உடனடியாக கிடைக்கும்படி செய்டு வருகிறாராம். தேனி மாவட்டத்திம் பல இடங்களில் வீடுகளுக்கு நேரடியாகவே நிவாரண உதவிகள் தேனி மாவட்ட அ.தி.மு.க. சார்பில் போய் சேர்கிறதாம். இதன் நிலைமை ஓ.பி.எஸ். ஜெயித்த போடி சட்டமன்ற தொகுதியில் நன்றாகவே பார்க்க முடிகிறதாம். ஒருவேளை அடுத்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. ஜெயித்தால் தங்களது மாவட்டமான தேனி அ.தி.மு.க.வின் கோட்டையாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த கொரானா காலத்தை நன்கு பயன்படுத்தி அரசியல் செய்கிறார் ஓ.பி.ரவீந்திரநாத் என்கிற தகவலும் சொல்லப்படுகிறது.

எம்.டி.ஆர்.ஸ்ரீதர்