அதிர்ஷ்ட சக்கரத்தில் நடிகை வாணிபோஜன்!

slider சினிமா

 

VAANI-BOJAN

 

கடந்த சில வருடங்களுக்கு முன்புவரை தனியார் தமிழ் தொலைக் காட்சிகளின் மெகா சீரியல்களில் டைட்டில் நாயகியாக வலம் வந்தவர் வாணிபோஜன். கடந்த ஆண்டு வெளியான  ‘ஓ மை கடவுளே’ படத்தின் மூலம் இவர் சின்னத் திரையிலிருந்து பெரிய திரைக்குள் நுழைந்தார். இந்தப் படத்தில் வாணிபோஜன் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. இதனால் சினிமா பட வாய்ப்புகள் வர ஆரம்பித்தன.  விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடிக்கவும் ஒரு புதிய படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில் தற்போது நடிகர் சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கவும் தேர்வாகியுள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்தில் இந்த படங்கள் தயாராகவுள்ளனவாம். நடிகர் வைபவ் நடித்துள்ள ‘லாக்கப்’ படத்திலும் வாணிபோஜன் நடித்துள்ளார். இதில் இயக்குநர் வெங்கட் பிரபு வில்லன் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும்,   ஆதவ் கண்ணதாசனுடன் பேய் படம் ஒன்றிலும் நடித்துள்ளார் வாணிபோஜன். இதுபோல் விதார்த் தயாரித்து நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக வருகிறார். இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடரில் ஜெய் ஜோடியாக நடித்கிறார். அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்கவும் வாணி போஜனிடம் பேச்சுவார்த்தை நடக்கிறது.