வெள்ளியிலிருந்து தங்கத்துக்கு உயர்ந்த பி.விசிந்து!

slider விளையாட்டு
PV-SINDHU

 

இந்திய பேட்மிண்டன் உலகில் பி.வி.சிந்து முதலிடத்தில் இருக்கிறார். உலக பேட்மிண்டன் வரிசையிலும் முன்னணி தர வரிசையில் இடம்பிடித்துள்ளார். உலக சாம்பியன் பட்டம் வென்று இந்தியாவுக்கு பெருமையும் வாங்கித் தந்துள்ளார். கொரானாவினால் வீட்டில் இருக்கிறார். வீட்டிலே பயிற்சிகள் மேற்கொண்டு வருவதாகவும் கூறியிருக்கிறார்.

இவர் சமீபத்தில் ஒரு சமூக வலைத்தளத்துக்கு பேட்டியளித்தார். அதில், “2016-ம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் இறுதி ஆட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றேன். அதன்பிறகு மற்ற போட்டிகளில் 6-7 வெள்ளிப் பதக்கங்களை பெற்றேன். இதனால் மக்கள் என்னிடம் சிந்துவுக்கு இறுதிப் போட்டி என்றாலே பயம் வந்து விடுகிறது என்று பேசத் தொடங்கினர். கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் மீண்டும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தேன். ஏற்கனவே உலக போட்டியில் இரண்டு வெள்ளி, இரண்டு வெண்கலம் கைப்பற்றி இருக்கிறேன். அதனால் இந்தமுறை தோற்றுவிடக்கூடாது என்பதில் தீவிரமாக இருந்தேன். மக்கள் என்னை (வெள்ளிப் பதக்கத்தை மனதில் வைத்து) சில்வர் சிந்து என்று அழைப்பதை விரும்பவில்லை. அதனால் களத்தில் 100 சதவீதம் எனது முழு திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்ற உத்வேகம் இருந்தது. அதன்படியே சிறப்பாக விளையாடி உலக சாம்பியன் ஆகி தங்கப்பதக்கத்தை வசப்படுத்தினேன்’’ என்று சிந்து அந்த பேட்டியில் கூறியுள்ளார்.