அஜித் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்த இளம் நடிகர்!

slider சினிமா
aathav-kannadasan

 

தமிழ் சினிமாவில் ரஜினி, கமலுக்கு அடுத்த முக்கியமான இடத்தில் இருப்பவர் அஜித். இவருக்கு தமிழகத்தில் லட்சக்கணக்கான ரசிகர்கள் இருக்கிறார்கள். நடிகர் அஜித் மே 1-ம் தேதி பிறந்தவர் என்பதால், அவருடைய பிறந்த நாளுக்கு இன்னும் சில நாட்களே உள்ளன. அவரது  பிறந்தநாளையொட்டி பொது டி.பி. ஒன்றை திரைப் பிரபலங்களை வைத்து வெளியிட திட்டமிட்டிருந்தனர்.  இதில் பங்கெடுத்து வெளியிட இருந்த பிரபலங்களில் நடிகர் ஆதவ் கண்ணதாசனும் ஒருவர்.

இந்நிலையில் திடீரென ஆதவ் கண்ணதாசன் தனது டுவிட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  “அஜித்தின் அலுவலகத்தில் இருந்து எனக்கு போனில் அழைப்பு வந்தது. கொரோனா நேரத்தில் அவரின் பிறந்த நாளுக்காக பொது டி.பி. வெளியிட்டு கொண்டாட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்கள். இது அவருடைய தனிப்பட்ட கோரிக்கை. ஒரு ரசிகனாக, சக நடிகனாக, மனிதனாக அவரின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்க விரும்புகிறேன். இந்த கோரிக்கையை நான் டுவிட் செய்து விளக்கட்டுமா என்று கேட்டதற்கு அவர்கள் சரி என்றார்கள். இந்த நேரத்தில் அனைவரும் நலமாக வாழ வாழ்த்துவோம். தல அஜித்தின் வார்த்தைக்கு மதிப்பு கொடுப்போம்’’ என்று  கூறியுள்ளார்.