வருத்தமாக இருக்கிறது – நடிகை திரிஷா!

slider சினிமா
TRISHA

 

இயக்குநர் பிரியதர்ஷன் டைரக்‌ஷனில் வெளியான ‘லேசா… லேசா’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை திரிஷா. இவர் விக்ரமுடன் நடித்த ‘சாமி’ படம் பெரிய மார்க்கெட்டை இவருக்கு ஏற்படுத்தி தந்தது. தமிழ் சினிமாவுடன் தெலுங்கிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தார் திரிஷா. இப்போதும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக பார்த்து நடித்து வருகிறார். கடந்த 20 வருடங்களுக்கும் மேலாக தமிழ் சினிமாத்துறையில் இருந்துவரும்  நடிகை திரிஷா கொரானாவினால் வீட்டிலே முடங்கி கிடக்கிறார்.

இது குறித்து நடிகை திரிஷாஅவர் கூறுகையில்,  “நான் சுதந்திர பறவை. எப்போதும் வீட்டில் நான் இருந்தது கிடையாது. தோழிகளுடன் அரட்டை அடிப்பதில் பிஸியாக இருப்பேன். அவர்களுடன் ஊர் சுற்றுவேன். இது எல்லாம் படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் நான் நேரம் போக்கும் முறை. இப்போது வீட்டிலே இருப்பது தர்மசங்கடமாக இருக்கிறது. தோழிகளுடன் கூட வீடியோ காலில் பேசி விடுகிறேன். ஆனால், படப்பிடிப்புக்கு சென்று கேமரா முன்னால் நடிக்காமல் இருப்பது வருத்தமாக இருக்கிறது’’ என்று கூறியுள்ளார்.