கல்யாணத்துக்குப் பிறகும் நடிப்பில் அசத்தும் நடிகை!

slider அரசியல் மருத்துவம்

PRIYAMANI 

தமிழ் சினிமாவில்    2004-ம் ஆண்டு  வெளியான ‘கண்களால் கைது செய்’ படம் மூலம் அறிமுகமானவர் பிரியாமணி. இதன்பிறகு  ‘பருத்திவீரன்’ படம்  இவருக்கு பல படங்களை தமிழில் பெற்றுத் தந்தது. மேலும், தெலுங்கு, மலையாளம், கன்னட படங்களிலும் நடித்து வந்தார். இப்படி நடித்துக் கொண்டிருக்கும்போதே மும்பையை சேர்ந்த தொழில் அதிபர் முஸ்தபா ராஜுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார் பிரியாமணி.

பெரும்பாலும் கல்யாணத்துக்குப் பிறகு நடிகைகள் நடிப்பதை நிறுத்திவிடுவர். சிலர் கொஞ்ச காலம் கழித்து நடிக்க வருவார்கள். இதில் பிரியாமணி வித்தியாசமானவர். கல்யாணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். இப்போது தெலுங்கில்  ‘விராட பருவம் 1992’ என்னும் படத்தில் பிரியாமணி நக்ஸலைட்டாக முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்க இருக்கிறார்.  வேணு உடுக்குலா என்பவர் இயக்குகிறார். இந்தப் படத்தின் கதாநாயகன் தெலுங்கு பிரபலம் ராணா டகுபதி. உண்மை சம்பவங்களை பின்னணியாகக் கொண்டு இப்படம் உருவாகவுள்ளது. இதில் முன்னணி நடிகை சாய் பல்லவி கதாநாயகியாக நடிக்கிறார்.