கேப்டன்களில் சிறந்தவர் அனில் கும்பளே – கவுதம் காம்பிர்!

slider விளையாட்டு
ANIL-KUMBLE

 

இந்திய  கிரிக்கெட் அணியில் முன்னணி இடது கை பேட்ஸ்மேனாக  விளங்கியவர் கவுதம் காம்பிர். இவர் தற்போது பா.ஜ.க. எம்.பியாகவும் உள்ளார்.க இந்திய அணியின் கேப்டனாக  கங்குலி இருந்தபோது இந்திய அணியில் அறிமுகம் ஆனவர் காம்பிர். அதன்பின் டிராவிட், அனில் கும்ப்ளே, எம்.எஸ். டோனி, விராட் கோலி ஆகியோரின் தலைமையிலும் விளையாடிள்ளார். எம்.எஸ். டோனி தலைமையில் இவர் விளையாடிய காலத்தில் இந்தியா டி-20 மற்றும் 50 ஓவர் உலக கோப்பையை  வென்றது குறிப்பிடத்தக்கது. இவர் சமீபத்தில், “கும்ப்ளே இன்னும் நீண்ட காலம் கேப்டனாக நீடித்திருந்தால் ஏராளமான சாதனைகள் படைத்திருப்பார்’’ என்று கூறியிருக்கிறார்.

இதுபற்றி கவுதம் கம்பிர் கூறுகையில் ‘‘கங்குலி இந்திய அணியின் கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார். என்றாலும், எனக்கு பிடித்த கேப்டன்  யார் என்றால் நான் நிச்சயம் அனில் கும்ப்ளே என்றுதான் சொல்வேன்.  அனில் கும்ப்ளே கேப்டனாக இருந்தபோது, அவருடைய தலைமையின் கீழ் நான் ஆறு டெஸ்ட் போட்டிகளில்தான் விளையாடினேன். அவரால் நீண்ட காலத்திற்கு இந்திய அணியின் கேப்டனாக இருக்க முடியில்லை. அப்படி இருந்திருந்தால் ஏராளமான சாதனைகள் படைத்திருப்பார்’’ என்று கூறியிருக்கிறார் கவுதம் காம்பிர். அவருடைய இந்தப் பேச்சு, இப்போது கிரிக்கெட் வட்டாரத்தில் பல்வேறு முன்னணி வீரர்கள் மத்தியில் பெரும் விவாதமாகி வருகிறது.

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட் 2007-ம் ஆண்டில் தனது கேப்டன் பதவியை ராஜினாமா செய்தார். அப்போது 17 வருடம் அணியில் விளையாடிய அனுபவம் கொண்ட அனில் கும்ப்ளே டெஸ்ட் அணியின் கேப்டனாக ஆக்கப்பட்டார். குறுகிய காலம் தான் டெஸ்ட் அணியின் கேப்டனாக இருந்தபோதும் ஆஸ்திரேலியாவில் இந்தியா அணி ஒரு டெஸ்டில் வெற்றிபெற்ற வரலாற்றையும் படைத்தார். இதன்பின்னர் தொடர்ந்து அவருக்கு கேப்டனாக தொடரும் நிலை ஏற்படவில்லை. இதற்கு காரணம் அந்த நேரத்தில் பல்வேறு வெற்றிகளை இருபது ஓவர் போட்டிகளிலும், ஐம்பது ஓவர் போட்டிகளிலும் சாதித்துக் கொண்டிருந்த எம்.எஸ். டோனிக்கு ஒருநாள் மற்றும் டி20 அணியுடன் சேர்த்து டெஸ்ட் அணிக்கான கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. இதுவும் அனில் கும்பளேவுக்கு டெஸ்ட் அணியின் கேப்டனாக நீடிக்கமுடியாத நிலையை ஏற்படுத்தியது என்கிறார்கள் கிரிக்கெட் வல்லுனர்கள்.

  • எஸ்.சிவாநந்தன்.