நட்டத்தைத் தவிர்க்க ஐந்து மொழிகளில் ‘மாஸ்டர்’!

slider சினிமா

 

vijaymaster

 

நடிகர் விஜய்யின் 64 -வது படமாக ’மாஸ்டர்’ உருவாகியுள்ளது. இந்தப் படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி நடித்திருப்பதும் இந்தப் படத்தை பலரும் எதிர்பார்க்கும் ஒன்றாக மாற்றியுள்ளது. கொரானா பாதிப்பு இல்லை என்றால் ஏப்ரல்  9-ம் தேதி மாஸ்டர் ரிலீஸாகியிருக்கும். தற்போது  ஊரடங்கு நீடிப்பதால் எந்த மாதம் ரிலீஸ் செய்வது என்கிற குழப்பத்தில் உள்ளது இப்படத்தின் தயாரிப்பு தரப்பு.

ரிலீஸ் தேதி தள்ளிப்போனதால் ஏற்பட்ட நட்டத்தை தவிர்க்கவும், மேற்கொண்டு லாபம் ஈட்டவும், இப் படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என்று ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளார்களாம். இது குறித்து தமிழகத்திலுள்ள ஒரு பிரபல திரையரங்கம் தனது டுவிட்டரில், “ஐந்து மொழிகளில் ‘மாஸ்டர்’ படத்தை வெளியிடும் பணி தற்போது நடைபெற்றுவதாக’’ கூறியுள்ளது என்பதும் கவனிக்கத்தக்கது.

நடிகர் விஜய் எத்தனையோ சூப்பர்ஹிட் படங்களை கொடுத்திருந்தாலும், விஜய் படம் ஒன்று பான் இந்தியா படமாக வெளியாவது இதுவே முதன்முறை என்றும் கோலிவுட் வட்டாரத்தில் பேச்சு கிளம்பியுள்ளது.