கடவுள் நமக்குள் வசிக்கிறார் – சல்மான்கான்!

slider சினிமா
SALMAN-KHAN

 

கொரோனாவை கட்டுபடுத்த மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உட்பட பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதேநேரத்தில் அத்தியாவசிய மற்றும் மருத்துவ காரணங்களுக்கு மக்களை அனுமதித்தும் உள்ளது. ஆனாலும் பல இடங்களில் குறிப்பிட்ட சதவீதத்தில் காரணம் ஏதுமின்றி வெளியில் சுற்றும் சம்பவங்களும் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. இது காவல்துறைக்கு பெரும் சங்கடங்களை தந்து வருகிறது. இப்படி  சிலர் ஊரடங்கை மீறுவது குறித்து பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான்கான் தனது வேதனையை டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

அந்த டுவிட்டரில்  சல்மான்கான், “அனைவரும் வீட்டிலேயே இருக்கும்படியும், குடும்பத்துடன் நேரத்தை செலவிடும்படியும் அரசு கூறியுள்ளது. நீங்கள் வீட்டிலிருந்தபடியே உங்கள் பிரார்த்தனையை செய்யுங்கள்.  கடவுள் நமக்குள் வசிக்கிறார் என்பதை நாம் சிறுவயதிலேயே கற்றுக் கொண்டுள்ளோம். எல்லோரும் ஒருநாள் சாகத்தான் வேண்டும். ஆனால், தற்போது நீங்கள் சாக விரும்புகிறீர்களா? உங்கள் சொந்த குடும்பத்தையும் இந்த நாட்டையும் ஆபத்தில் தள்ள விரும்புகிறீர்களா? அல்லது நமக்காக உழைக்கும் போலீஸார் மற்றும் மருத்துவ துறையினருக்கு உறுதுணையாக இருக்க விரும்புவீர்களா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்க நீங்கள் வெளியில் செல்வதை யாரும் தடுக்கவில்லை. ஆனால் அப்படி செல்லும்போது கையுறைகள் மற்றும் முக கவசங்களை பயன்படுத்துங்கள்’’ என்று அதில் கூறியுள்ளார்.