நான் பிஸியாகத்தான் இருக்கிறேன் – தமன்னா  

slider சினிமா
TAMANNA

நடிகை தமன்னா தமிழ், தெலுங்கு சினிமாவில் பல படங்களிலும், பாலிவுட்டில் சில படங்களிலும் நடித்துள்ளார். இப்போதும் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாக்களில் சில படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார். கடந்த வருடங்களில் இவர் நடித்த சில படங்கள் தோல்வியடைந்தன. இதனால் சமூக வலைத்தளங்களில் இவருக்கு பட வாய்ப்புகள் இல்லை என்பது போன்ற கமெண்டுகள் வெளியாகிக் கொண்டிருக்கிறது.

இது குறித்து நடிகை தமன்னா தற்போது கூறுகையில், “எனக்கு பட வாய்ப்புகள் இல்லை என்று தவறான தகவல்கள் பரவி வருகின்றன. இனிமேல் சினிமாவில் எனக்கு எதிர்காலம் இல்லை என்றும் பேசுகிறார்கள். ஆனால், 365 நாட்களும் நான் படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கிறேன். இப்போதும் பிஸியாகத்தான் இருக்கிறேன். தற்போது ‘சீட்டிமார்’ என்ற தெலுங்கு படத்தில் கபடி அணி பயிற்சியாளராக நடித்து வருகிறேன். இது சவாலான வேடமாக இருக்கிறது. இந்த கதாபாத்திரத்துக்காக கடுமையாக உழைக்கிறேன். நான் நடிக்கும் முதல் விளையாட்டு சம்பந்தமான கதையம்சம் உள்ள படம் இதுவாகும். வாழ்க்கையில் இதுவரை கபடி விளையாடியது இல்லை. இந்த படத்துக்காக கபடி பயிற்சிகள் எடுத்து நடிப்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. கபடியைப் பற்றிய நுணுக்கங்கள், கபடி வீராங்கனையின் உடல் மொழி போன்றவற்றை கற்றுக்கொண்டு நடித்து வருகிறேன். இது எனது சினிமா வாழ்க்கையில் முக்கிய படமாக இருக்கும்’’ என்று கூறியிருக்கிறார்.