ஹாலிவுட்டோடு கைகோர்க்கும் பாலிவுட் பிரபலங்கள்

slider உலகம் கலை மருத்துவம்

 

 

கொரோனா என்னும் உயிர்க்கொல்லி நோய் காரணமாக, பெரும்பாலான  நாடுகள்  ஊரடங்கு பிறப்பித்து மக்களை ஒரு கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன. இதில் ஏழைகள், ஆதரவற்றோர், ஊனமுற்றோர், தினக்கூலிகள் வருமானமின்றி அதிகளவில் கஷ்டங்கள் அனுபவித்து வருகிறார்கள். இவர்களுக்கு தொழில் நிறுவனங்கள், வசதி படைத்தவர்கள் என்று பலரும் தங்களால் ஆன உதவிகளை உணவாகவோ, உணவு பொருளாகவோ, பணமாகவோ தந்து உதவுவதும் நடந்து வருகிறது. இந்த வகையில் சினிமாத் துறையினரின் பங்களிப்பும் பெருமளவில் இருந்து வருகிறது.

இந்த வகையில் தற்போது ஹாலிவுட் நடிகர்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் தொலைக்காட்சியில் நேரடி நிகழ்ச்சியை நடத்தி கொரோனா நிதி திரட்ட முடிவெடுத்துள்ளார்கள்.  இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொள்ளவுள்ளனர். பிரபல அமெரிக்க பாடகி லேடி காகா இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிகழ்ச்சி மூலம் வசூலாகும் தொகையை உலக சுகாதார நிறுவனத்துக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் வழங்கவுள்ளார்கள்.