ரஜினிகாந்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ்!

slider சினிமா
LAWRENCE-RAJINIKANTH

ரஜினிகாந்த் நடிப்பில்  ‘சந்திரமுகி’ படம் வெளிவந்து பதினைந்து வருடங்களுக்கு மேலாகிறது.  ‘சந்திரமுகி’ அப்போது மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்தப் படத்தை இரண்டாம் பாகமாக எடுக்க கடந்த வருடத்திலிருந்து இயக்குநர் பி.வாசு முயற்சி எடுத்து வந்தார். இரண்டாம் பாகத்திலும் ரஜினிகாந்தை நடிக்க வைக்க பி.வாசு மேற்கொண்ட முயற்சிகள் பல்வேறு காரணங்களால் நின்றுபோனது.

இந்நிலையில் தற்போது சந்திரமுகி -2 படத்திற்கான வேலைகளை பி.வாசு மீண்டும் தொடங்கியுள்ளார். மேலும், இதில் ரஜினிகாந்துக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்கப் போகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருக்கிறது. ரஜினிகாந்தின் அனுமதியுடன் இந்தப் படத்தில் தான் நடிப்பதாக ராகவா லாரன்ஸ் கூறியிருப்பதும் குறிப்பிடத்தக்கது.