மோடி இஸ் ரியலி கிரேட் – டிரம்ப்

slider அரசியல் உலகம் மருத்துவம்
MODI-TRUMB

கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளின் கோரிக்கையை ஏற்று ஊரடங்கு மேலும் நீட்டிக்க பிரதமர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ரூ.5 லட்சம் வரையிலான வருமான வரிப்பிடித்தத்தை உடனடியாக விடுவிக்கும்படி, மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் 14 லட்சம் பேர் பயன் பெறுவர். மேலும் அனைத்து ஜி.எஸ்.டி., தொடர்புடைய வரி பிடித்தத்தையும் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் சிறு, குறு தொழில் நடத்துவோர் உட்பட 1 லட்சம் பேர் பயனடைவர்.

கொரானா நோய்த் தொற்றால் இன்று மாலை வரையில், தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை மோத்தம் 738.  இன்று மட்டும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டதுள்ளது.

மேலும், கொரானா தொற்று காரணமாக தமிழகத்தில் இதுவரை வீட்டுக் கண்காணிப்பில் 60,739 பேரும், அரசு கண்காணிப்பில் 230 பேரும் உள்ளனர். சிகிச்சை அளித்த 4 டாக்டர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக இதுவரை 6,095 பேருக்கு ரத்த மாதிரி பரிசோதனைகள் எடுக்கப்பட்டுள்ளன. 5 பேரின் உடல்நிலைமை மோசமாக உள்ளது. மற்றவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுவரை 21 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இன்று டிஸ்சார்ஜ் ஆனவர்களில் ஒருவர் 82 வயதானவர். கொரானாவால் தமிழகத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆக உள்ளது.

இரண்டு தினங்களுக்கு முன்பாக, ஹைட்ராக்ஸிகுளோரோகுயின் மருந்தினை ஏற்றுமதி செய்யவில்லை எனில் அதற்கான விளைவை இந்தியா சந்திக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடும் தொனியில் பேசியிருந்தார். இந் நிலையில், தற்போது,  “மோடி கிரேட், ரியலி குட்” என டிரம்ப் பாராட்டியுள்ளார்.

உலகளவில் 70 சதவீத ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து உற்பத்தி இந்தியாவில் தான் செய்யப்படுகிறது. இந்த மருந்து கொரோனா சிகிச்சைக்குப் பயன்படுத்தப்படலாம் என்று அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அறிவித்துள்ளது. மலேரியாவுக்கு எதிராக பயன்படுத்தப்படும் இந்த மருந்தினால் கொரோனா தொற்றை எதிர்கொள்ள முடியுமா என்று வல்லுநர்கள் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர். கடந்த வாரம் இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலான ஐ.சி.எம்.ஆர், இந்த மருந்தை கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் சுகாதாரத் துறை ஊழியர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.

கொரானாவால் போடப்பட்டிருக்கும் நாடு தழுவிய ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மத்திய அரசு வரும் 11ம் தேதி முடிவு எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரோனா பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என பிரதமர் மோடி அறிவித்திருந்தார். மார்ச் 24 முதல் அமலான ஊரடங்கு வருகின்ற ஏப்.,14ம் தேதி முடிவடைகிறது. இதற்கிடையே எதிர்க்கட்சி தலைவர்களுடன் மோடி இன்று (08-04-2020) வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இக் கூட்டத்தின் முடிவில், கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு காலகட்டத்தை நீட்டிக்க வேண்டும் என பெரும்பாலான மாநில அரசுகளும், மாவட்ட நிர்வாகங்களும், மற்றும் நிபுணர்களும் பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.