‘கோப்ரா’ படம் குறித்து இயக்குநர் அஜய் ஞானமுத்து!

slider சினிமா

 

நடிகர் விக்ரம் நாயகனாகவும், இந்திய கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் வில்லனாகவும் நடித்துவரும் படம் ’கோப்ரா’. இந்தப் படத்தை ’டிமாண்டி காலனி’,  ‘இமைக்கா நொடிகள்’ போன்ற வெற்றி படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கி வருகிறார். மிகப் பிரம்மாண்டமாக தயாராகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியாகவுள்ளது. சில வாரங்களுக்கு முன்பு ‘கோப்ரா’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.

இந்நிலையில் இயக்குநர் அஜய் ஞானமுத்துவிடம் விக்ரம் ரசிகர் ஒருவர், ‘கோப்ரா’ டீசர்  விக்ரம் பிறந்தநாளான ஏப்ரல் 17-ம் தேதி அன்று வெளியாகுமா என கேள்வி எழுப்பியிருந்தார்.  இதற்கு பதிலளித்த  அஜய் ஞானமுத்து, “கொரோனா ஊரடங்கால் டீஸரை தற்போது வெளியிட முடியாது. இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தபின் டீஸர் வெளியிட்டு தேதி அறிவிக்கப்படும்’’ என்று பதில் கூறியுள்ளார்.