வெற்றிமாறன் படத்தில் நடிக்க விரும்பும் ஹரீஷ்!

slider சினிமா

 

HARISH-KALYAN

 

தொலைக் காட்சி நிகழ்ச்சியான ‘பிக்பாஸ்’  நேரலை ஒன்றில் கலந்து கொண்டதன் மூலம் வெகு பிரபலமானவர் ஹரீஷ். இதன் பின்னர் இவர் நடித்த ‘ பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும்’, தாராள பிரபு’ போன்ற படங்கள் மூலம்   நிறைய ரசிகர்கள் இவருக்கு சேர்ந்துள்ளனர். மேலும், வித்யாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார் .

இளம் நடிகர் ஹரீஷ் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.  அப்போது ஹரீஷிடம் ரசிகர் ஒருவர் “உங்களுக்கு எந்த இயக்குநருடன் பணியாற்ற ஆசை?” என கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த ஹரீஷ் கல்யாண், “எனக்கு நிறைய இயக்குநர்கள் பிடிக்கும். அவர்களில் எனக்கு பிடித்தது வெற்றிமாறன். அவர் சிறந்த அறிவாளி, படைப்பாளி. அவர் இயக்கிய அனைத்து படங்களும் பிடிக்கும். அவருடன் பணியாற்ற ஆசை. அவருக்கு அடுத்தபடியாக கவுதம் மேனன் எனக்கு பிடிக்கும். அவரது படங்கள் என்றாலே ஸ்பெஷல் தான்” என்று பதில் அளித்துள்ளார்.