திரைக்கதை எழுதும் சோனியா அகர்வால்!

slider சினிமா
SONIYA-AGARWAL

 

கொரோனா சாதாரண மக்களை மட்டுமல்ல பெரும் பணக்காரர்கள், ஆட்சியாளர்கள், கலையுலகப் பிரபலங்கள் என்று எல்லோரையும் ஒருசேர ஆட்டி வைத்து வருகிறது. எப்போதும் பிஸியாக இருக்கும் கலையுலகத்தினர் இந்த கொரானா கெடுபிடியில் எப்படி தங்கள் ஓய்வை வீட்டிலேயே கழித்து வருகிறார்கள் என்கிற தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

இந்த வகையில்  நடிகை சோனியா அகர்வால் தனது வீட்டில் கட்டாய ஓய்வுப் பொழுதை எப்படி போக்குகிறார் என்று அறிக்கை விடுத்துள்ளார். அந்த அறிக்கையில், “தினமும் காலை என் குடும்பத்தினருடன் யோகா செய்கிறேன். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகிறது. இப்போது நம்மை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள இதுதான் ஒரே வழி. சினிமாவுக்காக திரைக்கதை தயார் செய்து வருகிறேன். அதை செய்ய போதுமான நேரம் இருக்கிறது. பறவைகள், விலங்குகளுக்கு உணவு கொடுக்கிறேன். குடும்பத்தினருடன் நேரத்தை செலவழிக்க இதுவே அற்புதமான தருணம். வீட்டுக்குள் இருங்கள். அரசாங்கத்தின் அனைத்து உத்தரவுகளையும் பின்பற்றுங்கள் என்று இதன் மூலம் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.