மனித நேயத்தில் உயர்ந்து வரும் விஜய்சேதுபதி!

slider சினிமா

கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமா பத்திரிகையாளராகவும், பாடலாசிரியராகவும், எழுத்தாளராகவும் திகழ்ந்தவர் நெல்லை பாரதி. எழுத்தின் மீதிருந்த ஆர்வம் காரணமாக பத்திரிகைத் துறையில் நுழைந்த இவர், நிருபராகவும், உதவி ஆசிரியராகவும், பொறுப்பாசிரியராகவும், சினிமா பாடலாசிரியராகவும், எழுத்தாளராகவும், மேடைப் பேச்சாளராகவும் திகழ்ந்து தன் திறமைகளுக்கான அடையாளங்களை விதைத்தார். கடந்த ஆறு மாதங்களாக உடல்நலக் குறைவோடு இருந்தவர், நேற்று (3.4.2020) அதிகாலை காலமானார். கொரானா நெருக்கடி காரணமாக அவரது குடும்பத்தினர் மற்றும் மிக நெருங்கிய சில பத்திரிகையாளர்கள் மட்டுமே அவரது இறுதிச் சடங்கில் பங்கெடுத்தனர்.

நெல்லை பாரதியின் மறைவுச் செய்தி அறிந்த நடிகர் விஜய் சேதுபதி உடனடியாக நேரில் வந்து இறுதி மரியாதை செலுத்தியதோடு மட்டுமல்லாமல், பொருளாதாரச் சிக்கலில் வாழ்ந்து வந்த அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி,  தேவையான பண உதவியும் செய்தார். விஜய் சேதுபதியின் திடீர் வருகையும், அவர் செய்த உதவியும் அங்கு கூடியிருந்த பத்திரிகையாளர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.