ஜோர்டானில் தவிக்கும் மலையாள பிரபல நடிகர்!

slider சினிமா
PRITHVIRAJ

 

மலையாளத்தில் பிரசித்தி பெற்ற   ‘ஆடுஜீவிதம்‘ என்ற நாவல் படமாகி வருகிறது. இதில் பிரபல நடிகர் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி வரை நடத்த திட்டமிட்டப்பட்டதால், கொரானாவுக்கு இந்தியாவில் ஊரடங்கு அமல்படுத்தும் முன்பு படக்குழு இந்தியாவிலிருந்து ஜோர்டானுக்கு சென்றது.

கொரானா காரணமாக ஜோர்டான் வந்திறங்கும் அனைத்து வெளிநாட்டினரையும் 14 நாட்கள் தனிமையில் வைக்க அந்த அரசு முடிவு செய்தது. இதன்படி இந்தப் படத்தின் படக்குழுவினரும் அந்த நாட்டு அரசால் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். இந்தப் படத்தின்  இயக்குநர் ப்ளெஸ்ஸி சில தினங்களுக்கு முன்பு கேரள திரைப்படச் சங்கத்துக்கு தங்களது 58 பேர் கொண்ட குழுவை மீட்டுச் செல்லுமாறு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து நடிகர் பிருத்விராஜ் தனது டுவிட்டரில், “எங்கள் குழுவில் ஒரு மருத்துவர் இருக்கிறார். ஒவ்வொரு மூன்று நாட்களுக்கு ஒரு முறை அவர் எங்கள் ஒவ்வொருவரையும் பரிசோதிக்கிறார். மேலும், ஜோர்டான் அரசாங்கம் நியமித்துள்ள மருத்துவரும் அவ்வப்போது எங்களைப் பரிசோதிக்கிறார். தற்போது இருக்கும் நிலையில் எங்கள் குழுவில் இருக்கும் 58 பேரை மீட்பது என்பது இந்திய அதிகாரிகளின் பிரதான கவலையாக இருக்காது என்பதை என்னால் முழுவதும் புரிந்துகொள்ள முடிகிறது. உலகம் முழுக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் நாடு திரும்பக் காத்துக் கொண்டிருக்கின்றனர். எங்களுக்கு எப்போது சரியான நேரமும், வாய்ப்பும் வருகிறதோ அப்போது நாங்களும் இந்தியா திரும்புவோம் என நம்புகிறேன். என்று பதிவிட்டுள்ளார்.