‘துப்பறிவாளன் -2’ பற்றி பிரசன்னா!

slider சினிமா

 

Prasanna-Vishal

 

சில வருடங்களுக்கு முன்பு மிஷ்கின் இயக்கத்தில் விஷால், பிரசன்னா, வினய் நடிப்பில் வெளிவந்து பெரும் வரவேற்பை பெற்ற படம் ’துப்பறிவாளன்’.  இந்த வரவேற்பும் வெற்றியும் இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க வைத்தது.  இந்த இரண்டாம் பாகத்தில் விஷால் மற்றும் பிரசன்னா ஆகியோருடன் ரகுமான், கௌதமி நடித்த முதற்கட்ட படப்பிடிப்பு லண்டனில் நடந்து முடிந்தது. இதன் பின்னர் படத்தினர் ஹீரோவும், தயாரிப்பாளருமான விஷாலுடன் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக மிஷ்கின் இந்தப் படத்திலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார்.

இந்த விவகாரத்தை முன்னிட்டு விஷாலுக்கும், மிஷ்கினுக்கும் தகராறு ஏற்பட்ட நிலையில் தற்போது ’துப்பறிவாளன்-2’ படத்தின் மீதிக் காட்சிகளை விஷாலே இயக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது குறித்து முந்தைய துப்பறிவாளனிலும், இப்போதைய இரண்டாம் பாகத்திலும் நடித்துள்ள பிரசன்னாவிடம் மிஷ்கின் இல்லாமல் ’துப்பறிவாளன் -2’  எப்படி இருக்கும் என்று ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்த பிரசன்னா, ”துரதிர்ஷ்டவசமாக மிஷ்கின் இந்த படத்தில் இல்லை. அதற்காக நான் வருந்துகிறேன். அதே நேரம் விஷால் சிறப்பானதை கொடுப்பார் என நம்புகிறேன். அவரிடம் நிரூபிக்கப்பட வேண்டியவை நிறையவுள்ளது” என்று கூறியுள்ளார்.