மங்காத்தா-2ஆக மாறும் வலிமை

slider சினிமா
AJITHKUMAR

 

தமிழ் சினிமாவில் திருப்புமுனை ஏற்படுத்திய ‘சதுரங்க வேட்டை’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் எச்.வினோத். இதன்பின்னர் இவர் இயக்கிய ’தீரன் அதிகாரம் ஒன்று’ திரைப்படம் பெருத்த வரவேற்பை பெற்றது. இந்த வெற்றியே அவருக்கு அஜித் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்று தந்தது. அஜித்தின் ’நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கி வெற்றி கண்டார். இந்த வெற்றியே மீண்டும் அவரை வைத்து ’வலிமை’ படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்தது. இந்த ஆண்டு பெரிதும் எதிர்பார்க்கப்படும் படமாக இந்தப் படம் அமையும் என்கிற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.

தற்போது இந்தப் படத்தின் அப்டேட் பற்றி எச்.வினோத் தனது டுவிட்டரில், “அஜித் நடித்ததிலேயே எனக்கு மிகவும் பிடித்த படம் ’மங்காத்தா’. அஜித் ரசிகர்களே அடுத்த  ‘மங்காத்தா’வான  ‘வலிமை’யைக் காண தயாராகுங்கள் என குறிப்பிட்டுள்ளார். அவரின் இந்தப் பதிவு அஜித் ரசிகர்களை பெரியளவில் உற்சாகப்படுத்தி வருவதாக சமூக வலைத்தள வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.