ஐந்து கதாநாயகிகளோடு பிரபுதேவா

slider சினிமா

 

பஹிரா படத்தில் பிரபுதேவா

 

நடன இயக்குநராக அறிமுகமாகி, நடிகராகவும் இயக்குநராகவும் மாறிய பிரபுதேவா தற்போது பாலிவுட்டிலும் பிஸியாக இருந்து வருகிறார். தமிழில் இவர் நடித்துள்ள   ‘யங் மங் சங்’, ’பொன். மாணிக்கவேல்’  படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. இதற்கு அடுத்து இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும்  ‘பஹிரா’ என்கிற படத்தில் நடித்து வருகிறார்.  இந்தப் படம் சைக்கோ திரில்லர் திரைப்படமாக  உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு 70 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில்,  இதன் அடுத்தகட்ட படப்பிடிப்பை கோவா மற்றும் இலங்கையில் நடத்த திட்டமிட்டிருந்தனர் படக்குழு.  னால், கொரோனாவினால்  படப்பிடிப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருகிறது.

‘பஹிரா’ படத்தில் பிரபுதேவாவுக்கு  மொத்தம் ஐந்து நாயகிகளாம். அந்த ஐந்து கதா நாயகிகளில் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தில் நடித்த காயத்ரியும்,  தனுஷின் ’அனேகன்’ படத்தில் நடித்த அமைராவும் இப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். மேலும் மூன்று பேர் புதுமுக நாயகிகள் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.